Saturday, November 29, 2008

நாங்களும் டி.ஆர் வாரிசு தான்!!!


நீ பொறந்தது ஒரு பட்டி
அங்க இருந்தது குப்ப தொட்டி;

நீ வளர்ந்தது ஒரு சிட்டி
உன்ன சுத்தி இருந்தவங்க எல்லாம் வெட்டி;

உன் கூட இருக்குறாங்க பாட்டி
அவங்களோட உனக்கு போட்டி;

உன் பர்சு கொஞ்சம் குட்டி
நீ ஒரு சுட்டி;

ஹேய் ஸ்வீட்டி
நீ ரொம்ப ப்யூட்டி;

Monday, November 10, 2008

இதோ பாருங்க இந்தியா!!!



இந்த படத்தைப் பாருங்க. இது தான் இந்தியா.
"என்னடா இது? ஒரு பூனையைப் பார்த்து இந்தியானு சொல்றாளே!!! என்ன அநியாயம்டா சாமி!!!" அப்படினுதான யோசிக்கிறீங்க?

உண்மை தாங்க. ஆனால் சாதாரண இந்தியா இல்ல. "வைட் ஹௌஸ்" ல வளருகிற இந்தியா. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் வளர்த்துட்டு வர பூனை தான் இது. ஜார்ஜ் புஷ் தன் செல்லப் பூனைக்கு "இந்தியா"னு பேர் வெச்சிருக்கார்.
வருத்தமா இருக்கு இல்லையா?ஆனால் எனக்கு அத விட பெரிய வருத்தம்.
ஏன் தெரியுமா?
அந்த இந்தியா இப்ப வைட் ஹௌச விட்டு போகப் போகுது!!!

Thursday, November 6, 2008

இங்கிலீஷ் காரரசே...

மஹா கவி பாரதியார் பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். இந்திய விடுதலைக்காக நிறைய பாடல்களை பாடிருக்கார். மத்த மொழிகளிலும் நிறைய பேர் விடுதலை பத்தி பாடிருக்காங்க. நம்ம நாட்டுல நாம் விடுதலை பெற்ற அந்த கால கட்டத்துல தான் "western culture" பரவ ஆரம்பம் ஆச்சுன்னு சொல்றாங்க.இன்னிக்கு புடவை, தாவணி எல்லாம் போய் ஜீன்ஸ், அனார்கலி , ஹேர் ஸ்த்ரைதநிந்க் தான் லேட்டஸ்ட் ட்ரெண்டு.

விடுதலை பத்தின பாடல்கள் எல்லாருக்கும் போய்ச் சேர்த்தாலும் அந்த நாட்களில் எழுதப்பட்ட பேஷன், வாழ்க்கை முறை பத்தின பாடல்கள் யாருக்கும் ரீச் ஆகல என்பதுதான் என்னோட கருத்து. இப்ப இந்தப் பாடலை படிச்சுப் பாருங்க. (நீங்க பாடகரா இருந்தா நீங்களே இதுக்கு மெட்டு கட்டி பாடியும் பாக்கலாம்)


இங்கிலீஷ் காரரசே இந்தியா வர வர சொகுசே
இங்கிலீஷ் காரரசே இந்தியா வர வர சொகுசே

குங்குமம் மஞ்சளும் போச்சு கோரிவைர் காலமாச்சு
சீமாட்டி முகம் தனிலே ரோஸ் பவ்டர் போடலாச்சு; (இங்கிலீஷ்)

விபூதி நாமம் போச்சு விதவிதமான பொட்டுகள் ஆச்சு
கனவான்கள் முகத்தினிலே கருப்பு சிவப்பு பொட்டுகள் ஆச்சு; (இங்கிலீஷ்)

பனை ஓலை எழுத்தாணி பாரினிலே பறந்து போச்சு
கனவான்கள் கணக்கெழுத பௌன்டன் பேனா பேப்பர் ஆச்சு; (இங்கிலீஷ்)

ஒரு காசு பீடியும் போச்சு சுகந்தர் பெட்டி சுருட்டும் போச்சு
அறியாத பசங்க வாயில் ஆனை மார்க் சிகரட் ஆச்சு; (இங்கிலீஷ்)

வீட்டுக்கொரு சைக்கில் ஆச்சு விதவிதமான மோட்டார் ஆச்சு
மாட்டு வண்டி பிழைப்பும் போச்சு ஜட்கா வண்டி அதிகமாச்சு; (இங்கிலீஷ்)

காலிலிடும் பீலி மெட்டி கட்டோட பறந்து போச்சு
சீமாட்டி கால் தனிலே ஸ்லிப்பெர் ஜோடா போடலாச்சு; (இங்கிலீஷ்)

களப்புக் கடை அதிகமாச்சு குடிப் பெண்கள் மெம்பராக
ஆயிரக் கணக்காக அதிகம் அதிகம் ஸேரலாக்சு; (இங்கிலீஷ்)

சீட்டித் துணி பறந்து போச்சு சில்க் புடவை அதிகமாச்சு
நாடகங்கள் பெருத்து போச்சு நாகரீகம் மாறிப் போச்சு; (இங்கிலீஷ்)


இந்த பாட்டோட அர்த்தம் நமக்கு நல்லாவே புரியுது பாருங்க. இதுல தமிழ்ப் புலமை ஒன்னும் பெருசா இல்லங்க. கிராமத்து பாட்டு போல கொச்சைத் தமிழ்ல தான் எழுதி இருக்காங்க. 1950 க்களில் மக்கள் இந்த மாதிரித்தான் இருந்திருக்காங்கன்னு ஒரு நகைச்சுவையும் சேர்த்து எவ்வளவு அழகா சொல்லிருக்காங்க!!! இந்தப் பாட்டை எழுதினது யாருன்னு தெரியல. ஆனா யாரா இருந்தாலும் அவங்களுக்கு "hats off". இது மாதிரியான பாடல்களை பாமர மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பது தமிழ்க் குடிமகன்களான நம்மோட கடமை இல்லையா?

இந்தப் பாட்ட என் பாட்டி பாடி நான் கேட்டிருக்கேன். இதை நான் எழுதும்போது பாட்டி என் கூட இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பாங்க!!! ஆனா அவங்க இப்ப இல்லைங்க. அதனால இந்த போஸ்ட் தெய்வமா இருக்குற என் பாட்டிக்குச் சமர்ப்பணம்.