Friday, January 9, 2009

கல்லூரி!!!




வண்ணத்துப் பூச்சிகளாய் வட்டமிட்டு மகிழ்ந்தாலும்
திண்ணமதாய் வாழ்வியலில் வழிகாட்டும் காலமதே
கல்லூரி வாழ்க்கையது கவின் சார்ந்த ஆசான்கள்
பல்வேறு செயர்கல்வி சார்ந்த ஒரு நேரமதே!


எண் திசையைச் சேர்ந்தோரும் பல்வேறு நிலந்தோறும்
வந்திறமை பெற்றிடவே கல்லூரி கடல் சார்ந்து
நினைவெல்லாம் பசுமையதாய் பறவைகளாய்ப் பறந்தோடி
கனவுகளாய் கண்டவை தாம் நினைவாக்கும் இடமன்றோ!

இசையோடு நடிப்பும் எழ்த்தோடு பேச்சும்
அசைவால் பலர்போல் சுட்டும் திறனும்
அறிவுத் திறமை போட்டிகளில் பங்கேற்று
பெரிதாய் கல்லூரி மேடைகள் பல கண்டு
பரிசோடு பெருமை புகழ் மொழி அனைத்தும்
செறிவாய்க் கொடுக்கும் கல்லூரி வாழ்க்கை!