Tuesday, April 21, 2009

சொர்கவாசல்!!!

"Gateway to the land of Gods"

இந்த வரிக்குள் எத்தனை  அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன
இயற்கை எழில் கொஞ்சும் இமாலயம், கங்கோத்ரி, கங்கை நீரின் சலசலப்பு, ஆஸ்ரமம்,  தியான மண்டபம் .இவை எல்லாம் இருக்கும் இடம் கடவுளின் புகலிடம். அது சொர்கத்திர்க்குச் செல்லும் பாதை.

"ரிஷி' என்றால் "புலன்கள்".
"இஷ் " என்றால் "வல்லமை படைத்தவன்".

"ரிஷிகேஷ்" - தன் புலன்களை ஆளக்குடியா வல்லமை படைத்தவன். 

இந்தியாவின் உத்ராஞ்சல் மாநிலத்தில் கங்கோத்ரிக் கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகான நகரம்.  இந்தியாவின் மிகப் புனிதமான நதியாகக் கருதப்படும் கங்கை, கைலாச மலையில் தோன்றி ரிஷிகேஷ் என்கிற இடத்தில் தான் தரையைத் தொடுகின்றது. கங்கையில் நீராற்றினால் பாவங்கள் தீர்ந்து விடும் என்பார்கள்.  மாசற்ற கங்கை நீரின் புனிதத்தை இங்கு உணரலாம்.

"லக்ஷ்மன் ஜூலா" - இது கங்கையின் மேல் இருக்கும் ஒரு ஊஞ்சல் பாலம். 

 ரிஷிகேஷ் நகரத்தைச்  சுற்றிப் பார்க்க இந்திய சுற்றுலா கழகம் போதிய வசதிகளை அமைத்துள்ளது. 






















வருடம் முழுவதும் மிதமான வெப்பம் கொண்ட ரிஷிகேஷிற்கு மேலும் அழகு சேர்ப்பது அங்கு அமைந்துள்ள "ஆர்ஷ வித்யா குருகுலம்". சுவாமி தயானந்தாவால் நிறுவப்பட்ட இந்த ஆஸ்ரமம் வேதம், சமஸ்க்ரிதம் கற்றுக் கொள்ள உகந்த இடம். 

கங்கா ஸ்நானம், மண்டபத்தில் தியானம்.... என் எட்டாவது வயதில், அறியாத பருவத்தில் இரண்டு நாட்கள் ஆஷ்ரமத்தில் கழித்த நினைவுகள் இன்னும் மனதில் கங்கையின் வெள்ளி நீர் போல ஓடிக்கொண்டு இருக்கின்றது. வாழ்க்கையில் ஒருவன் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களில் இதுவும் ஒன்று. இறைவன் அருளிய இந்த அருமையான இடத்தை ஒரு முறையாவது பார்க்காவிட்டால் வாழ்நாளில் ஏதோ ஒன்றை நிச்சயம் நீங்கள் இழக்கிறீர்கள். 










 
பி.கு - ரிஷிகேஷ் ஆஷ்ரமத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆஷ்ரமம்  செல்ல முன்பதிவு செய்திருக்க வேண்டும்.