Saturday, May 30, 2009

இவங்க எல்லாம் எப்ப தான் திருந்துவாங்களோ?


"Global warming"  பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். நிறைய awarness programmes கூட இருக்கு. ஆனாலும் மக்கள் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறாங்க? எப்படின்னு கேக்கறீங்களா? 

"வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்" அப்படின்னு அரசாங்கம் சொல்லுது. சரி அவங்க சொல்லுக்கு மதிப்பு கொடுக்கலாம்னு ஒண்ணுக்கு பதில் நாலு தென்னைமரம் வளர்த்தேன். ஆசை ஆசையா வளர்த்த மரத்தில் இருந்து பின் வீட்டுக்குள் குப்பை விழுதாம். மரத்தை வெட்டச் சொல்லி பின் வீட்டுக்காரங்க ரொம்ப நாள் தொந்தரவு கொடுத்தாங்க. வேற வழி இல்லாமல் போனா போகுதேன்னு ஒரு மரத்தை வெட்டினோம்.  

ஒரு நாள் மதியானம் ரெண்டு மணி இருக்கும். அசந்து தூங்கிட்டு இருந்தேன். டர்ர்ருனு காலிங் பெல் சத்தம். நாலு பேர் வந்தாங்க. இ.பி ல வேலை பார்க்குறதா சொன்னாங்க.  மின்வெட்டுக் கம்பத்துக்கு இடைஞ்சலாய் இருக்குதுன்னு சொல்லி ரெண்டாவது மரத்தையும் வெட்ட வெச்சுட்டாங்க!

சரி.... இருக்குற ரெண்டு மரத்தை பாத்து சந்தோஷப் படலாம். போனதை நெனைச்சு வருத்தப் பட வேண்டாம்னு விட்டுட்டேன். 

கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் பக்கத்துக்கு வீட்டுக்காரங்களால பிரச்சனை.  மாடி கட்ட போறோம். மரத்தை வெட்டுங்கன்னு சொன்னாங்க. நாங்க முடியவே முடியாதுன்னு எவ்வளவோ சண்டை போட்டு பாத்தோம். ம்ம்ம்ஹ்ம்ம்...... எந்தப் பலனும் இல்ல. மூணாவதும்  போச்சு!

கடைசியில இப்போ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒண்ணு மட்டும் மிச்சம் இருக்கு. இதுலயும் யார் கண்ணு படப் போகுதோ?!!

சரி..  இப்போ மேட்டருக்கு வருவோம்.
அவங்க தான் மரம் வளர்க்கல. என்னை போல ஆசையா வளப்பவங்களையாவது செய்ய விடலாமே. ஏன் இப்படி இருக்காங்க?  இவங்களுக்கு சமுதாய அக்கறை எப்பத்தான் வருமோ? எனக்கு ரொம்ப கவலையாய் இருக்கு. 

இவங்க எல்லாம் எப்பத் தான் திருந்துவாங்களோ?