ஜக்கு மாமியின் சாக்லேட் பர்பி:
"என்ன மாமி? யாருக்கு மெயில் அனுப்பிண்டு இருக்கேள்?", என்று கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் பங்கஜம் மாமி.
"அது ஒன்னும் இல்லடிமா. அமெரிகால இருக்குற என் பொண்ணு ரம்யாக்கு ஒரு ரெசிபி அனுபிருந்தேன். இப்போ மாபிள்ளை கிட்ட இருந்து ரிப்ளை வந்திருக்கு. பொண்ணுக்கு இவ்வளவு நன்னா சமைக்க கத்து கொடுத்ததுக்கு என்னை பாராட்டி தான் இந்த மெயில அனுப்பி இருப்பர்னு நினைக்கிறேன்".
"என்ன திடீர்னு பொண்ணுக்கு ரெசிபி எல்லாம்?", திகைத்தபடி கேட்டாள் பங்கஜம் மாமி.
"அதுவா? அவா ஆபிஸ்ல புதுசா கல்யாணம் ஆயிருக்கற கப்ல்ஸ் எட்டு பேர் சேர்ந்து நயாகரா பால்சுக்கு போறத முடிவு பண்ணி இருந்தாளாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஐடெம் கொண்டு வரதா ப்ளானாம். இவள் நான் ஸ்வீட் கொண்டு வரேன்னு சொன்னாளாம். என்கிட்டே கேட்டிருந்தா. நான் அவளுக்கு சாக்லட் பர்பி எப்படி பண்ணனும்னு ரெசிபி அனுப்சேன். அவ ஸ்வீட்டை பண்ணி கொடுத்து எல்லாரையும் அசத்தி இருப்பான்னு நினைக்கிறன்." என்று பெருமிதத்துடன் சொன்னாள் மாமி.
"நயாகராவா? அருமையான இடம் மாமி."
"ஆமாம். மிகப்பெரிய நீர்விழ்ச்சி. 176 அடி உயரம். அமெரிக்காவுக்கும் கனடா நாட்டுக்கும் நடுவுல இரண்டு நாடுகளையும் பிரிக்கிற பார்டரா அமைஞ்சிருக்கு. ரொம்ப அழகான டூரிஸ்ட் ஸ்பாட்."
"ம்ம்ம் ... நயாகராவும் சாக்லேட் பார்பியும் நல்ல காம்பினேஷன் தான் போங்கோ."
"மாமி, நானும் உங்க மாப்பிள்ளையோட பாராட்டு லெட்டரை பாக்கலாமா?", ஆவலுடன் கேட்டாள் பங்கஜம் மாமி.
"ஓஒ பேஷா பாரேன்", உரத்த குரலில் ஜக்கு மாமி கூறினாள்.
kitchenqueen@gmail.com என்ற தன் முகவரியின் இன்பாக்ஸ் இல் இருந்த லேட்டஸ்ட் மெய்லை திறந்தாள் மாமி. மாப்பிள்ளை மெயிலை படிக்கத் தொடங்கினாள்.
"ஹாய் மாமி,
எப்படி இருக்கேள்? இங்க நாங்க நாலு கப்ல்ஸ் சேர்ந்து நாயகராக்கு டூர் போயிருந்தோம். ரம்யா சொல்லி இருப்பாளே? இங்கே இயற்கை அழகு பிரமாதம். ஆனா ஒரு விஷயம் தன் கூத்தா போச்சு! எல்லாரும் மூக்கு பிடிக்க லன்ச் முடிச்சதும் ரமி தான் பண்ணின ஸ்வீட்டை எல்லாருக்கும் கொடுத்தா. என் ப்ரென்ட் அரவிந்த் அத வாயில வெச்சுண்டு கடிக்க முடியாம கடிச்சு..... அவனுக்கு பல் வலி வந்துடுத்து! அப்பறம் ரெண்டு கேள்ஸ் நெய் சரியில்லாததால அங்கேயே வாந்தி எடுத்துட்டா. ரமிக்கு வயிறு கொட கொடனு கொடைய ஆரம்பிடுசுத்து . அவசரத்துக்கு ரெண்டு மாத்திரையை போட்டுண்டு லபோ திபோன்னு அவசர அவசரமா கிளம்ப வேண்டியதா போயிடுத்து. அப்பறம் வீட்டுக்கு வந்து டாக்டர் அபாயின்மேன்ட் பிக்ஸ் பண்ணி... இன்னுமா சொல்லணும்? மாமி... இனிமேல் நீங்க ரமிக்கு எந்த ரெசிபியும் மெயில் பண்ணாதிங்கோ. ப்ளீஸ்... இனிமேல் இந்த மாதிரி ஸ்வீட் எல்லாம் பண்ணவே வேண்டாம்னுநு ரமி கிட்ட சொல்லிட்டேன்.
உங்க உடம்பை பாத்துக்கோங்கோ. மாமாவ கேட்டதா சொல்லுங்கோ.
வித் லவ்,
ராம். "
வாயை பொத்தியபடியே சிரித்தாள் பங்கஜம் மாமி.
Tuesday, October 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பிரமாதம் போ! இப்படி பட்ட சின்ன விஷியங்களில் தான் என்ன சுவை
உன் கற்பனை பிரமாதம் . ஆனந்த விகடனில் ஒரு குட்டி கதை படிப்பது போல் இருந்தது
Blogrolled you :) Keep writing. Blogging is an amazing experience. I simple love it.
P.S :Can you please activitate name/url comment so that i can comment from my website address?
Btw mine is www.nivispace.com
Post a Comment