Monday, November 9, 2009

பிடிக்கலியா? பிடிக்க வெச்சுருவோம்ல!

சமீபத்தில் நடந்த "self-growth" பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஒரு அருமையான கதை கூறினார்.

கோவையில் ஒரு சாமியார் வசித்து வந்தார். ஒரு நாள் அவருக்கு பிக்ஷை அளிக்க செல்வந்தர் ஒருவர் அழைப்பு விடுத்தார். சாமியாரும் அழைப்பை ஏற்றுக்கொண்டு செல்வந்தர் வீட்டிற்குச் சென்றார். செல்வந்தரின் மனைவி சுவாமிஜியை நன்கு உபசரித்து பல விதமான உணவு வகைகளை இலையில் பரிமாறினர். அதில் பாகற்காயும் இடம்பெற்று இருந்தது. ஆனால் சாமியாருக்கோ பாகற்காய் என்றாலே அலர்ஜி! பிக்ஷைக்குச் சென்றிருந்ததால் வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. அதனால் வேறு வழி இன்றி இலையில் வைத்த அடுத்த கணமே மூக்கை முடிக்கொண்டு பாகற்காய் பொரியலை ஒரே வாயில் முழுங்கி விட்டார்!

ஆனால் அந்த வீட்டுப் பெண்மணியோ இதை தவறாகப் புரிந்து கொண்டாள். சாமி பொரியலை ரொம்பவே ருசித்து சாபிடுகிறார் என்று நினைத்து மீண்டும் ஒரு கரண்டி இலையில் வைத்தார்! மறுபடியும் அவர் அதை முழுங்க... திரும்பவும் அவள் அதைப் பரிமாற... மறுபடியும் முழுங்க... திரும்பவும் பரிமாற.... ஒரு வழியாக உணவை முடித்துக் கிளம்பிபார் சாமியார்.

சில நாட்களுக்குப் பின் சென்னையில் வேறு ஒருவர் வீட்டிற்குச் சென்றார் சாமியார். பெண்களிடம் ரகசியம் சொன்னால் தங்குமா? அது கோவை செல்வந்தரின் உறவினர் வீடு என்பதால் அங்கேயும் சாமிக்குப் பாகற்காய் பிடிக்கும் என்ற செய்தி சென்றுவிட்டது. கலிபோர்நியா, நியூயார்க் எங்கே சென்றாலும் பாகற்காய் பாகற்காய்!

இப்படியாக சாமியார் எங்கே சென்றாலும் பாகற்காய் காத்துக்கொண்டிருந்தது!தினமும் அதையே சாப்பிட நேர்ந்ததால் அவருக்கு சுத்தமாகப் பிடிக்காத பாகற்காய் ரொம்பவே பிடிததாகிப் போனது!


இந்தக் கதை மூலம் தயானந்த சரஸ்வதி நமக்கு கூறுவது என்னவென்றால் நமக்குப் பிடிக்காத காரியத்தை பல்லைக் கடித்துக் கொண்டு தினமும் செய்தால் சில நாட்களில் அது நமக்குப் பிடித்துப் போகும். இது படிப்பு, வேலை எல்லாவற்றிற்கும் பொருந்தும் நியதி ஆகும்.


Wednesday, August 12, 2009

சப்பாத்தி சப்பாத்தி...



புதுசு புதுசா ரேசிபிஸ் செஞ்சு பார்கிறது ஒரு பொழுது போக்கு தான். ஆனால் நாம் வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு டிஷ் கொஞ்சம் வித்யாசமா ட்ரை பண்ணுறதும் ஒரு நல்ல பொழுது போக்கு தானே?
அடிக்கடி செய்யுற சப்பாதியயே கொஞ்சம் வித்யாசமா அதே சமயம் ஈசியா செஞ்சு பார்போமா? இதோ மசாலா சப்பாத்தி செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி செய்யத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதை தவிர ஓமப் பொடி கொஞ்சம்.

செய்முறை:

சப்பாத்தி மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு ஓமப் பொடியையும் சேர்த்து பிசையுங்கள். பின்பு சப்பாத்திகள் இட்டு கல்லில் வாட்டி எடுங்கள். அவ்வளவுதான்! எவ்வளவு சுலபமாக வேலை முடிந்தது பார்த்தீர்கள?

மாவு பிசையும் போது காரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை பச்சையாக துருவி சேர்த்துக் கொண்டால் வெஜிடபிள் மசாலா சப்பாத்தி ரெடி!




இதற்கு தொட்டுக் கொள்ள நீங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. மேதி சப்பாத்தி போல் அப்படியே சாப்பிட்டு விடலாம். வேண்டும் என்றால் தக்காளி சாஸ் அல்லது கெச்சப் சேர்த்துக் கொள்ளலாம்.



Saturday, August 1, 2009

நீங்களும் ஐஸ்வர்யா ராய் ஆகணுமா?



"அழகு"




இது எல்லாப் பெண்களும் வேணும் என்று நினைக்கிற ஒன்று. அழகாக எதனை வழிகள் இருக்கு? தெருவுக்குத் தெரு ப்யூடி பார்லர்கள் வந்தாச்சு. டி.வி ல அழகு சாதனப் பொருட்கள் பத்தி நிறைய சொல்றாங்க. ஆனால் இதுல எல்லாம் எவ்வளவு கெமிக்கல்ஸ் கலக்கராங்கனு நம்ம எல்லாருக்கும் தெரியும். இயற்கை மூலிகைகள் எப்படியெல்லாம் அழகு சாதனப் பொருளா உபயோகம் ஆகுதுன்னு பார்ப்போம்.



ஆலிவ் ஆயில் :

எப்படித் தயாரிக்கிறார்கள்?



ஆலிவ் மரத்தின் பழங்களை இலைகளில் இருந்து பிரிக்கிறார்கள்.
பழங்களை mechanical machines மூலம் நன்றாக crush செய்து அதில் இருந்து எண்ணை எடுக்கிறர்ர்கள்.
ஆலிவ் தவிர வேறு பொருட்கள் எண்ணையில் கலந்திருந்தால் அதன் essence குறைந்து விடும்.
அதனால் கடைசியாக "purification process" செய்கிறார்கள்.


என்ன பலன்?

1) கண்களுக்கு அடியில் கருவளையங்கள் இருப்பவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் கண்களுக்கு அடியில் லேசாக ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் கருவளையங்கள் மறைந்து விடும்.

2) உடம்பில் சூடு பட்டு விட்டால் அந்த இடத்தில ஒரு mark வந்துவிடும். இதை நீக்க ஆலிவ் ஆயில் தடவலாம்.

3) உடம்பில் எந்த பகுதியில் கரும்புள்ளி ஏற்பட்டாலும் அதை ஆலிவ் ஆயில் உடனே நீக்கி விடும்.

4) சமையல் செய்வதற்கும் இதை உபயோகிக்கலாம்.


அடுத்தப் பதிப்பில் வேறு ஒரு மூலிகைப் பொருளை பத்தி எழுதுகிறேன்.
ஆலிவ் ஆயில் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட வலை முகவரிக்குச் செல்லுங்கள்.




Saturday, May 30, 2009

இவங்க எல்லாம் எப்ப தான் திருந்துவாங்களோ?


"Global warming"  பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். நிறைய awarness programmes கூட இருக்கு. ஆனாலும் மக்கள் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறாங்க? எப்படின்னு கேக்கறீங்களா? 

"வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்" அப்படின்னு அரசாங்கம் சொல்லுது. சரி அவங்க சொல்லுக்கு மதிப்பு கொடுக்கலாம்னு ஒண்ணுக்கு பதில் நாலு தென்னைமரம் வளர்த்தேன். ஆசை ஆசையா வளர்த்த மரத்தில் இருந்து பின் வீட்டுக்குள் குப்பை விழுதாம். மரத்தை வெட்டச் சொல்லி பின் வீட்டுக்காரங்க ரொம்ப நாள் தொந்தரவு கொடுத்தாங்க. வேற வழி இல்லாமல் போனா போகுதேன்னு ஒரு மரத்தை வெட்டினோம்.  

ஒரு நாள் மதியானம் ரெண்டு மணி இருக்கும். அசந்து தூங்கிட்டு இருந்தேன். டர்ர்ருனு காலிங் பெல் சத்தம். நாலு பேர் வந்தாங்க. இ.பி ல வேலை பார்க்குறதா சொன்னாங்க.  மின்வெட்டுக் கம்பத்துக்கு இடைஞ்சலாய் இருக்குதுன்னு சொல்லி ரெண்டாவது மரத்தையும் வெட்ட வெச்சுட்டாங்க!

சரி.... இருக்குற ரெண்டு மரத்தை பாத்து சந்தோஷப் படலாம். போனதை நெனைச்சு வருத்தப் பட வேண்டாம்னு விட்டுட்டேன். 

கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் பக்கத்துக்கு வீட்டுக்காரங்களால பிரச்சனை.  மாடி கட்ட போறோம். மரத்தை வெட்டுங்கன்னு சொன்னாங்க. நாங்க முடியவே முடியாதுன்னு எவ்வளவோ சண்டை போட்டு பாத்தோம். ம்ம்ம்ஹ்ம்ம்...... எந்தப் பலனும் இல்ல. மூணாவதும்  போச்சு!

கடைசியில இப்போ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒண்ணு மட்டும் மிச்சம் இருக்கு. இதுலயும் யார் கண்ணு படப் போகுதோ?!!

சரி..  இப்போ மேட்டருக்கு வருவோம்.
அவங்க தான் மரம் வளர்க்கல. என்னை போல ஆசையா வளப்பவங்களையாவது செய்ய விடலாமே. ஏன் இப்படி இருக்காங்க?  இவங்களுக்கு சமுதாய அக்கறை எப்பத்தான் வருமோ? எனக்கு ரொம்ப கவலையாய் இருக்கு. 

இவங்க எல்லாம் எப்பத் தான் திருந்துவாங்களோ?

Tuesday, April 21, 2009

சொர்கவாசல்!!!

"Gateway to the land of Gods"

இந்த வரிக்குள் எத்தனை  அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன
இயற்கை எழில் கொஞ்சும் இமாலயம், கங்கோத்ரி, கங்கை நீரின் சலசலப்பு, ஆஸ்ரமம்,  தியான மண்டபம் .இவை எல்லாம் இருக்கும் இடம் கடவுளின் புகலிடம். அது சொர்கத்திர்க்குச் செல்லும் பாதை.

"ரிஷி' என்றால் "புலன்கள்".
"இஷ் " என்றால் "வல்லமை படைத்தவன்".

"ரிஷிகேஷ்" - தன் புலன்களை ஆளக்குடியா வல்லமை படைத்தவன். 

இந்தியாவின் உத்ராஞ்சல் மாநிலத்தில் கங்கோத்ரிக் கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகான நகரம்.  இந்தியாவின் மிகப் புனிதமான நதியாகக் கருதப்படும் கங்கை, கைலாச மலையில் தோன்றி ரிஷிகேஷ் என்கிற இடத்தில் தான் தரையைத் தொடுகின்றது. கங்கையில் நீராற்றினால் பாவங்கள் தீர்ந்து விடும் என்பார்கள்.  மாசற்ற கங்கை நீரின் புனிதத்தை இங்கு உணரலாம்.

"லக்ஷ்மன் ஜூலா" - இது கங்கையின் மேல் இருக்கும் ஒரு ஊஞ்சல் பாலம். 

 ரிஷிகேஷ் நகரத்தைச்  சுற்றிப் பார்க்க இந்திய சுற்றுலா கழகம் போதிய வசதிகளை அமைத்துள்ளது. 






















வருடம் முழுவதும் மிதமான வெப்பம் கொண்ட ரிஷிகேஷிற்கு மேலும் அழகு சேர்ப்பது அங்கு அமைந்துள்ள "ஆர்ஷ வித்யா குருகுலம்". சுவாமி தயானந்தாவால் நிறுவப்பட்ட இந்த ஆஸ்ரமம் வேதம், சமஸ்க்ரிதம் கற்றுக் கொள்ள உகந்த இடம். 

கங்கா ஸ்நானம், மண்டபத்தில் தியானம்.... என் எட்டாவது வயதில், அறியாத பருவத்தில் இரண்டு நாட்கள் ஆஷ்ரமத்தில் கழித்த நினைவுகள் இன்னும் மனதில் கங்கையின் வெள்ளி நீர் போல ஓடிக்கொண்டு இருக்கின்றது. வாழ்க்கையில் ஒருவன் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களில் இதுவும் ஒன்று. இறைவன் அருளிய இந்த அருமையான இடத்தை ஒரு முறையாவது பார்க்காவிட்டால் வாழ்நாளில் ஏதோ ஒன்றை நிச்சயம் நீங்கள் இழக்கிறீர்கள். 










 
பி.கு - ரிஷிகேஷ் ஆஷ்ரமத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆஷ்ரமம்  செல்ல முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

Friday, January 9, 2009

கல்லூரி!!!




வண்ணத்துப் பூச்சிகளாய் வட்டமிட்டு மகிழ்ந்தாலும்
திண்ணமதாய் வாழ்வியலில் வழிகாட்டும் காலமதே
கல்லூரி வாழ்க்கையது கவின் சார்ந்த ஆசான்கள்
பல்வேறு செயர்கல்வி சார்ந்த ஒரு நேரமதே!


எண் திசையைச் சேர்ந்தோரும் பல்வேறு நிலந்தோறும்
வந்திறமை பெற்றிடவே கல்லூரி கடல் சார்ந்து
நினைவெல்லாம் பசுமையதாய் பறவைகளாய்ப் பறந்தோடி
கனவுகளாய் கண்டவை தாம் நினைவாக்கும் இடமன்றோ!

இசையோடு நடிப்பும் எழ்த்தோடு பேச்சும்
அசைவால் பலர்போல் சுட்டும் திறனும்
அறிவுத் திறமை போட்டிகளில் பங்கேற்று
பெரிதாய் கல்லூரி மேடைகள் பல கண்டு
பரிசோடு பெருமை புகழ் மொழி அனைத்தும்
செறிவாய்க் கொடுக்கும் கல்லூரி வாழ்க்கை!