Monday, October 27, 2008

தீபாவளி தீபாவளி வந்தாச்சு...

என்னங்க..... தீபாவளி வந்தாச்சு. தீபாவளி ஸ்வீட் எல்லாம் பண்ணி முடிச்சிட்டீங்களா? நான் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஒன்னு சொல்லட்டுமா?


என்னடா இது... டி.வி ல வர எல்லா சமையல் ப்ரொக்ராம்லயும் இதை காட்டுறாங்களே மறுபடியும் ஸ்வீட் ரேசிபியானு யோசிக்கிறீங்களா? இது ஸ்வீட் ரெசிபி இல்லைங்க. நம்ம பாரம்பர்யத்தை காபாத்தற ஒரு விஷயம். புரியலியா? சரி சரி.... புரியும்படி சொல்றேன். இப்ப நான் தீபாவளி லேகியம் எப்படி செய்யறதுன்னு சொல்லித் தரேன்.


தேவையான பொருட்கள்:
சுக்கு- 10 கி
மிளகு- 10 கி
ஓமம்- 100 கி
கந்தாடிப்பில்லி- 10 கி
சித்தரத்தை- 10 கி
ஏலைக்காய்- 5 கி
ஜாதிக்காய்- 1/2
அதிமதுரம்- 10 கி
வெல்லம்- 250 கி
தேன்- 50 கி
நெய்- 100 கி

செய்முறை:
மேலே சொன்ன எல்லாவற்றையும் தனித்தனியா (நெய்யும் தேனையும் தவிர) பொடி பண்ணிகோங்க. அதுல கொஞ்சம் தண்ணி விட்டு பத்து இல்ல பதினஞ்சு நிமிஷத்துக்கு ஊர வச்சுடுங்க. இந்தப் பொடிகளை எல்லாம் ஒரு பாத்திரத்துல கொட்டி ஒரு கரண்டிய வச்சு நல்லா கலந்துக்கோங்க. மறுபடியும் தண்ணீர் விட்டு அடுப்புல மிதமான சூடுல வச்சு கிளருங்க. தண்ணீர் எல்லாம் வடிஞ்சப்பரம் பாத்திரத்தை அடுப்புல இருந்து இறக்கிடுங்க. நெய்யை நல்லா சூடு பண்ணி வச்சுகோங்க. சூடான நெய்யையும் தேனையும் நம்ம கலந்து வச்ச கலவைல கொட்டிடுங்க. மறுபடியும் எல்லாத்தையும் சேத்து நல்லா மிக்ஸ் பண்ணுங்க. லேகியத்தோட பதம் வரவரைக்கும் அடுப்புல வச்சு கிளருங்க.
தீபாவளி லேக்கியம் ரெடி!



சரி லேக்கியம் ரெடி. இதை எப்படி எப்போ சாப்பிடனும்னு நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது. காலைல எழுந்ததும் எண்ணை வெச்சு தலைக்கு குளிச்சதும் வெறும் வயத்துல ஒரு ஸ்பூன் லேகியத்தை வீட்டுல இருக்குற பெரியவங்க கையால வாங்கி சாபிடனும்.

தீபாவளி அன்னிக்கு நாம நெறைய ஸ்வீட் சாப்பிடுவோம் இல்லையா? அதனால இண்டைஜெஷன் ஏற்படலாம். அதை தடுக்கத்தான் இந்த லேகியத்தை சாப்பிடுறோம்.

"ப்ரிவென்ஷன் இஸ் பெட்டெர் தான் க்யூர்" !!!

3 comments:

Unknown said...

இந்த லேகியம் செய்வது எப்படி என்று யோசித்துக்கொண்டிருந்த பொழுது இந்த ப்ளாக் ஒரு வரப்ரசாதமாக அமைந்தது. மிக்க நன்றி. குறிப்பாக இளைய தலைமுறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

Unknown said...

it is a good sweet...

Nivi said...

அனைவரும் திபாவளிக்கு இன்னிப்பு செய்ய சமல்குறி எழுதும் தருணத்தில் , தீபாவளி லேகியம் குறிப்பு வித்தியாசமானது

keep writing :)