Monday, November 9, 2009

பிடிக்கலியா? பிடிக்க வெச்சுருவோம்ல!

சமீபத்தில் நடந்த "self-growth" பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஒரு அருமையான கதை கூறினார்.

கோவையில் ஒரு சாமியார் வசித்து வந்தார். ஒரு நாள் அவருக்கு பிக்ஷை அளிக்க செல்வந்தர் ஒருவர் அழைப்பு விடுத்தார். சாமியாரும் அழைப்பை ஏற்றுக்கொண்டு செல்வந்தர் வீட்டிற்குச் சென்றார். செல்வந்தரின் மனைவி சுவாமிஜியை நன்கு உபசரித்து பல விதமான உணவு வகைகளை இலையில் பரிமாறினர். அதில் பாகற்காயும் இடம்பெற்று இருந்தது. ஆனால் சாமியாருக்கோ பாகற்காய் என்றாலே அலர்ஜி! பிக்ஷைக்குச் சென்றிருந்ததால் வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. அதனால் வேறு வழி இன்றி இலையில் வைத்த அடுத்த கணமே மூக்கை முடிக்கொண்டு பாகற்காய் பொரியலை ஒரே வாயில் முழுங்கி விட்டார்!

ஆனால் அந்த வீட்டுப் பெண்மணியோ இதை தவறாகப் புரிந்து கொண்டாள். சாமி பொரியலை ரொம்பவே ருசித்து சாபிடுகிறார் என்று நினைத்து மீண்டும் ஒரு கரண்டி இலையில் வைத்தார்! மறுபடியும் அவர் அதை முழுங்க... திரும்பவும் அவள் அதைப் பரிமாற... மறுபடியும் முழுங்க... திரும்பவும் பரிமாற.... ஒரு வழியாக உணவை முடித்துக் கிளம்பிபார் சாமியார்.

சில நாட்களுக்குப் பின் சென்னையில் வேறு ஒருவர் வீட்டிற்குச் சென்றார் சாமியார். பெண்களிடம் ரகசியம் சொன்னால் தங்குமா? அது கோவை செல்வந்தரின் உறவினர் வீடு என்பதால் அங்கேயும் சாமிக்குப் பாகற்காய் பிடிக்கும் என்ற செய்தி சென்றுவிட்டது. கலிபோர்நியா, நியூயார்க் எங்கே சென்றாலும் பாகற்காய் பாகற்காய்!

இப்படியாக சாமியார் எங்கே சென்றாலும் பாகற்காய் காத்துக்கொண்டிருந்தது!தினமும் அதையே சாப்பிட நேர்ந்ததால் அவருக்கு சுத்தமாகப் பிடிக்காத பாகற்காய் ரொம்பவே பிடிததாகிப் போனது!


இந்தக் கதை மூலம் தயானந்த சரஸ்வதி நமக்கு கூறுவது என்னவென்றால் நமக்குப் பிடிக்காத காரியத்தை பல்லைக் கடித்துக் கொண்டு தினமும் செய்தால் சில நாட்களில் அது நமக்குப் பிடித்துப் போகும். இது படிப்பு, வேலை எல்லாவற்றிற்கும் பொருந்தும் நியதி ஆகும்.


1 comment:

Unknown said...

Hi,

Very good post.... Thanks for sharing the knowledge...

Regards,
Ashwin